ரூ.20 லட்சம் பாக்கி வேலூர் ஆப்ரேட்டர்களுக்கு அரசு கேபிள் நிறுத்தம்...!!
TnTelevision
04:44
0
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதிகளில் ஒளிபரப்பாகும் அரசு கேபிள் டிவி சிக்னலுக்கு அப் பகுதி ஆப்ரேட்டர் செலுத்த வேண்டிய சந்தா தொகை ரூ. 20 லட்சத்தை தொட்டுள்ளது. இதனால் அந்த ஆப்ரேட்டருக்கு வழங்கும் சிக்னலை நிறுத்து வைத்துள்ளனர்.
வேலூர் சத்துவாச்சாரியில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது... இதன் மூலம் இலவச சேனல்கள், கட்டண சேனல்கள் மற்றும் உள்ளூர் சேனல்கள் என மொத்தமாக சுமார் 81 சேனல்களை ஒளிபரப்பி வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2000 கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் உள்ளனர்... இதில் காட்பாடி பகுதியில் மட்டும் சுமார் 240 கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் உள்ளனர்.
இந்நிலையில் காட்பாடி பகுதியில் கடந்த 2 நாட்களாக கேபிள் டிவி சேனல்கள் தெரியவில்லை.. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். குறிப்பிட்ட ஒன்று இரண்டு சேனல்கள் மட்டுமே ஒளிபரப்பாகிறது டிவியில் சேனல்கள் தெரியாததால் பெரியவர் முதல் குழந்தைகள் வரை மிகவும் அவதி அடைந்துள்ளனர்.
இது குறித்து கேபிள் ஆப்ரேட்டர்களிடம் கேட்டால் நாங்கள் கட்டணத்தை செலுத்தி விட்டோம் அரசு கேபிள் டிவி நிறுவனம் தான் ஒளிபரப்பை நிறுத்தி வைத்துள்ளது என தெரிவித்தனர்.
இந்த பிரச்சினை குறித்து அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது...
வேலூர் காட்பாடி பகுதியில் ஒளிபரப்பப்படும் கேபிள் டிவி சேவைக்கு மட்டும் சந்தா தொகையாக ரூ.20 லட்சத்தை பாக்கி வைத்துள்ளனர். இதுகுறித்து கேபிள் டிவி ஆப்ரேட்டர்களிடம் பலமுறை நிலுவை தொகையை கட்ட கூறியும் இதுவரை அந்த தொகையை கட்டவில்லை இதன் காரணமாக காட்பாடி பகுதிகளில் கேபிள் டிவி சேவை இருட்டடிப்பு செய்யப்பட்டு ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது...
தற்போது நிலுவையில் உள்ள பாக்கி தொகையை கேபிள் ஆப்ரேட்டர்கள் கொஞ்சம் கொஞ்சமாக செலுத்தி வருகின்றனர் எனவே விரைவில் கேபிள் டிவி ஒளிபரப்பு மீண்டும் தொடங்கும் எனவும் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் இது போன்ற நடவடிக்கை தொடரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால்... ஆப்ரேட்டர்கள் அச்சத்தில் உள்ளனர்...!!
அடுத்து யாரோ...!! எந்த ஊரோ...!!

No comments