செட் டாப் பாக்ஸ் நிறுவுதல் கட்டணத்தை திருப்பி அளிக்க ஆப்ரேட்டர்களுக்கு உத்தரவு...!!
TnTelevision
04:21
0
கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் செட் டாப் பாக்ஸ்கள் (STB) நிறுவல் – இன்ஸ்டாலேஷன் சார்ஜ் தொடர்பாக மாவட்ட நிர்வாக கட்டளைகளுக்கு உடன்படாத கேபிள் ஆப்ரேட்டர்கள் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தின் நர்னல் மாவட்டத்தின் உப கோட்ட நீதிபதி திரு.விவேக் காளியா அவர்கள் தனது உத்தரவில்...
கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் தங்கள் சந்தாதரர்களிடம் வசூலித்த இன்ஸ்டாலேஷன்
சார்ஜ் செட் டாப் பாக்ஸ் நிறுவல் கட்டணம் மற்றும் ஆக்டிவேஷன் கட்டணத்தை
விலை பட்டியலில் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு வைப்பு தொகையை (திரும்பப்பெற)
கழித்த பின்னர் இரண்டு வாரங்களுக்குள் திருப்பி அளிக்கபட வேண்டும் என
உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பிட்ட
காலத்திற்குள் அவர்கள் தொகையை திரும்ப அளிக்க தவறினால் கேபிள்
ஆபரேட்டர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மாவட்டத்தில் உள்ள உள்ளூர் சந்தாதாரர்களில் ஒரு குழுவினர் STB எனப்படும்
செட் டாப் பாக்ஸ் பெட்டிகளுக்கான வசூலிக்கும் கட்டண விகிதங்கள்... இந்தியா
தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான (டிராய்) அமைப்பின் வழிகாட்டுதல்கள்
மற்றும் நெறிமுறைகள் படி இல்லை என கூறி கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு எதிராகப்
புகார் செய்திருந்தனர்.
தற்போது நடைபெற்று வரும் டிஜிடலாக்கத்தில் "கேபிள் ஆபரேட்டர்கள் STB எனப்படும் செட் டாப் பாக்ஸ் கட்டணம் என்றும்... ஆக்டிவேஷன் கட்டணம், இன்ஸ்டாலேஷன் சார்ஜ் என்ற பெயரில் ரூ 1,300 லிருந்து ரூ.1,700 வரை வசூல் செய்கின்றனர்
எனவும் சில இடங்களில் இந்த தொகை ரூ. 2500 வரை வசூலித்துள்ளனர் எனவும்
குற்றம் சாட்டியுள்ளன. மேலும் அவர்கள் குறிப்பிடுகையில் இந்த தொகை அதிகம்
என்பது ஒரு புறம் இருந்தாலும்... கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்
(ஒழுங்குமுறை) சட்டத்திற்கு எதிராக உள்ளது என சந்தாதாரர்கள் தங்களது
மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில், நீதிபது திரு.காளியா அவர்கள் கூறுகையில், "கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் அவர்கள் சந்தாதாரர்களிடம் இருந்து நிறுவல் கட்டணம், ஆக்டிவேஷன் கட்டணம் , ஸ்மார்ட் கார்டு, பழுது மற்றும் பராமரிப்பு என்ற பெயரில் கட்டணங்களை பெற அனுமதிக்க வேண்டாம் எனவும் அவர்கள் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI கட்டளைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டார்
மேலும் அவர் குறிப்பிடுகையில், ஆப்ரேட்டர்கள் செட் டாப் பாக்ஸ்
நிறுவும்போது STBக்கான கட்டணத்தை மொத்தமாக வசூலிக்காமல் முதல் மூன்று
ஆண்டுகளில் மாத அடிப்படையில் வாடகையாகவும் வசூலிக்க வேண்டும், என்று அவர் கூறினார்.

No comments