24 மணி நேர கர்நாடக இசை சேனலை தொடங்கியது – AIR...!!
TnTelevision
04:39
0
ஆல் இந்தியா ரேடியோ “ராகம்” என்ற பெயரில் ஒரு 24மணி நேர கர்நாடக மற்றும் இந்துஸ்தானி இசை சேனலை தொடங்குகிறது. DTH, மொபைல் App மற்றும்www.air bengaluru.com என்ற இணையதளம் மூலமாகஸ்ட்ரீம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்
இந்திய வரலாற்றில் முதன் முறையாக, பொது ஒளிபரப்பு நிறுவனம் பாரம்பரிய கர்நாடக மற்றும் இந்துஸ்தானி நிகழ்ச்சிகளுக்கு என ஒரு பிரத்தியேக 24 மணி நேர ரேடியோ சேனலை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சென்றடையும் எனவும்... இதில் 42 சதவீதம் ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சிகளும் மற்றும் 58 சதவீதம் அளவிற்கு கர்நாடக இசை நிகழ்ச்சிகளும் இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இது பெங்களுருக்கு ஒரு பெருமை சேர்க்கும் தருணமாக உள்ளது... ஏனெனில் பெங்களுரு நிலையம் தொழில்நுட்ப ஒலிபரப்பு மற்றும் நிகழ்ச்சி உள்ளடக்க மேலாண்மையை மேற்கொள்ளும் எனவும் மேலும் தேசிய அளவில் மற்ற 14அகில இந்திய வானொலி நிலையங்கள் அதிகாரப்பூர்வமாக அதன் நிகழ்ச்சி நிரலாக்க பங்களிப்பு அளிக்கும் எனவும் தெரிவித்தார் டாக்டர் சூரியபிரகாஷ், தலைவர், பிரசார் பாரதி கூறினார்.
வேர்ல்ட் ஸ்பேஸ் நிறுவனத்திற்கு பின்பு ஒரு கர்நாட்டிக் இசைக்கென ஒரு பிரத்தியேக சேனல்களாக அதுவும் ஆல் இந்திய ரேடியோ நிலையத்தில் இருந்து வருகிறது என்பது.. கர்நாடக இசை பிரியர்களுக்கு ஒரு பெரிய விருந்து...அதுவும் 24 மணி நேர இசை விருந்து,,,

No comments