டிஜிட்டலாக்கம் பேஸ் III மீது அழுத்தம் இல்லை, அரசின் பார்வையை ஏற்றது - அலகாபாத் ஐகோர்ட்...!!
TnTelevision
07:55
0
எனவே, ஆந்திரா, தெலுங்கானா உயர் நீதிமன்றங்கள் வழங்கப்பட்ட டிஜிட்டலாக்கம் (DAS) பேஸ் III காலக்கெடு நீட்டிப்பு உ.பி.மாநிலத்திற்கும் பொருந்தும் எனவும் தெரிவித்தனர்.
அலகாபாத் கேபிள் டிவி ஆபரேட்டர் நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவில் 11 செப்டம்பர் 2014 ல் மத்திய தகவல் அமைச்சகம் வெளியிட்ட நோட்டிஸில் மத்திய அரசு டிஜிட்டலாக்கத்தின் III மற்றும் IV ஆம் கட்டத்தின் செட் டாப் பாக்ஸ் பெட்டிகள் நிறுவுதல் கடைசி தேதி முறையே 31 டிசம்பர் 2015 மற்றும் 2016 என நீடிக்கபட்டுள்ளதற்கு தடை விதிக்க வேண்டும் என வேண்டி மனு தாக்கல் செய்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆர்.கே. ஓஜா குறிப்பிடுகையில் மும்பை, கர்நாடக, சிக்கிம், ஆந்திரப் பிரதேசம், மற்றும்
பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றங்களில் கேபிள் டிவி
ஆபரேட்டர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தனது
வாதத்தில் குறிப்பிட்டார்.
அவர்
மேலும் குறிப்பிடுகையில் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டில்... 12 ஜனவரி
கடித்தத்தில் பாம்பே உயர்நீதிமன்றம் ஜனவரி 4 தேதியிட்ட ஆணையை
குறிப்பிட்டு மத்திய அரசின் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில்
பலஉயர்நீதிமன்றகளால் வழங்கப்பட்ட இந்த நிவாரணம் நாடு முழுவதும் செல்லுபடியாகும் என குறிப்பிட்டிருந்தாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் மத்திய தகவல் அமைச்சகம் எனப்படும் MIB தனது சட்ட நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது எனவும், எனவே மனு ஆதரவாக ஒரு இடைக்கால ஆணை அனுப்ப அவசியம் இல்லை, எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

No comments