டெலிமார்கெடிங் விற்பனையை இருமடங்காக்க திட்டமிட்டுள்ளது - HBN...!!
TnTelevision
04:31
0
இந்தியாவின் முன்னணி டெலிமார்க்கெட்டிங் நிறுவனமான HBN இந்தியா நிறுவனம் (TELEBrands) அதன் வணிக விரிவாக்கம் செய்து.. இவ்வாண்டு 2016 ல் அதன் வரவு செலவை இருமடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
ஒரு ஆங்கில நாளிதழுக்கு HBN இந்தியா நிர்வாக இயக்குனர் ஹிதேஷ் இஸ்ரானி அளித்த பேட்டியில் "நாங்கள் மொத்த சந்தையில் எங்களது பங்களிப்பு 20 சதவீத அளவை நெருங்கியுள்ளது மேலும் சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் மதிப்பையும் பெற்றுள்ளோம்.... எங்கள் திட்டம் 2016 ல் எங்கள் போர்ட்ஃபோலியோ புதிய தயாரிப்புகள் சேர்ப்பதை தவிர, இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் எங்கள் ஊடுருவலை அதிகரிக்க வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் நிறுவனம் இந்த ஆண்டில் 24 புதிய சில்லறை வர்த்தக விற்பனை கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தவர்... 2016 ல் ரூ .200 கோடி வருவாய் ஈட்ட இலக்கை கொண்டுள்ளது எனவும் திரு.இஸ்ராணி தெரிவித்தார் . HBN இந்தியா தற்போது 110 கடைகளை கொண்டுள்ளது, மேலும் நாடு முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட கடைகளுக்கு பொருட்களை விநியோகித்து வருகிறது. தற்போது நாட்டின் அனைத்து பகுதிகளிலும்150 சில்லறை விநியோகஸ்தர்கள் இந்நிறுவனத்தின் சார்பில் பரவியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இஸ்ரானி படி, HBN இந்தியா நிறுவனம் இன்னும் நேரடியாக -வீடுகளுக்கு கொண்டு செல்லும் பிளாட்பார்ம்களில் இருப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் மேலும் இந்தியாவுக்கு வெளியே புதிய சந்தைகளை குறி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
"நாங்கள் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் நிறுவனம் அதன் செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது. மேலும் ஐரோப்பா போன்ற இடங்களில் வெளிநாடுகளில் அதன் இருப்பை விரிவாக்கும் திட்டம் இருப்பதாக திரு.இஸ்ரானி கூறினார். மேலும் HBN நிறுவனம் ஏற்கனவே வங்காளம், பூட்டான், நேபாள் , மாலத்தீவு,ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு போன்ற பல நாடுகளில் சர்வதேச விநியோகத்தில் உள்ளது எனவும் தெரிவித்தார்.
"நாங்கள் மார்ச் 2016 வாக்கில் டாடா ஸ்கை மற்றும் சன் DTH ல் எங்கள் சேனலை தொடங்க திட்டமிட்டுள்ளாதாக அவர் மேலும் தெரிவித்தார். HBN இந்தியா தற்போது 40 மில்லியன் வீடுகளையும் இந்தியாவில் 160 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்றுள்ளது எனவும் தெரிவித்தார்.

No comments