Select Menu

தலைப்பு செய்திகள்

சேனல் கார்னர்

அரசு கேபிள்

DTH செய்திகள்

டிஜிட்டல் இந்தியா

உள்ளூர் சேனல்

நீதிமன்ற செய்திகள்

தொழில்நுட்பம்

வீடியோ

» » மேற்காசியாவில் நிகழச்சிகளை வழங்க YuppTV உடன் இணைத்துள்ள சன் டிவி..!!


TnTelevision 04:35 0



நேற்றைய தினமான செவ்வாய்க்கிழமை சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனம், உலகின் மிகப் பெரிய OTT – எனப்படும் ஓவர் தி டாப்( மொபைல் போன்களில் டிவி)  சேவை அளிக்கும் நிறுவனமான YuppTV நிறுவனத்துடன் மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்காவில் நான்கு மொழிகளில் 10 சேனல்களை ஒளிபரப்ப பங்குதாரராக இணைந்துள்ளதாக அறிவித்தது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் YuppTV, சன் டிவி, KTV, சன் மியூசிக்ஆதித்யா டிவி (தமிழ் சேனல்கள்),சூர்யாகிரண் (மலையாளம்)ஜெமினி டிவிஜெமினி மூவிஸ் மற்றும் ஜெமினி காமெடி(தெலுங்கு) மற்றும் உதய (கன்னடம்) சேனல்களை வழங்கும்.
இது குறித்து சன் டிவி நெட்வொர்க் தலைவர் திரு.மகேஷ் குமார் அவர்கள் கூறுகையில் " YuppTV யுடன் இணைந்துள்ளது என்பது டிஜிட்டல் நெட்வொர்க்குகளில் சன் டிவி முன்னிலைபடுத்த மற்றும் அதன் மேம்படுத்தபட்ட சேவையை உலகம் முழுவதும் பல்வேறு OTT தளங்களின் மூலம் விநியோகத்திறனை அதிகரிப்பது எங்கள் யுக்திகளில் மற்றொரு முயற்சி ஆகும்," என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை மூலம் YuppTV நிகழச்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதன் மூலம்பொழுதுபோக்கு திறமையை மேம்படுத்தி உள்ளது மேலும் அதன் பட்டியலில் உள்ள வீடியோ உள்ளடக்கத்தை 25,000 மணி நேரமாக சேர்த்துள்ளது.
இந்த உடன்பாட்டின் மூலம்அட்லாண்டாவை சேர்ந்த பொழுதுபோக்கு வழங்குநர் அதனிடம் இருக்கும் 13 மொழிகளுடன் இதையும் சேர்த்து... உலகின் தெற்காசியவின்  நிகழ்ச்சிகளை வழங்க ஒரு முக்கிய டிஜிட்டல் தளமாக தனது பிராண்டை  முன்னெடுத்துள்ளது.

இது குறித்து YuppTV ன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. உதய் ரெட்டி கூறுகையில்  "சன் நெட்வொர்க்தென் இந்தியாவில் பெரிய தொலைக்காட்சி நெட்வொர்க்குடன் இணைந்துள்ளதன் மூலம்ஏற்கனவே நம்மிடம் இருக்கும்  அருமையான நூலகத்தில் சேர்க்க இன்னும் துல்லியமான ஒரு பிராந்திய பொழுதுபோக்கு நிகழச்சிகளை வழங்கவுள்ளது," என தெரிவித்தார். 

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments

Leave a Reply