உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து தென்னிந்தியாவில் வலுவான ஆதிக்கத்தில் - சன் டிவி..!!
TnTelevision
04:21
0
உச்ச நீதிமன்றம் ரெட் FM, என்பது சன் டிவி நெட்வொர்க்கின் ஒரு இணை நிறுவனமான டிஜிட்டல் ரேடியோ பிராட்காஸ்டிங் நிறுவனமாகும். ஃபேஸ் III நகரங்களுக்கு உரிமம் புதுப்பித்தல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. பெரிய இடைவெளியை உருவாக்கிய இந்த பிரச்சினை... நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் நிறுவனத்தின் தேவையை நிறைவு செய்வதான தீர்ப்பை வழங்கியுள்ளது.
வரும் காலங்களில், இந்த புதுப்பித்தலின் மூலம் நிறுவன பங்கின் விலை ஒரு சாத்தியமான மறு மதிப்பீட்டிற்கு வழிவகுக்கலாம்.
இருப்பினும், ஒரு நீண்ட காலமாக சன் டிவியின் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் மனதில் வைத்துள்ளது இரண்டு முக்கிய காரணிகளாகும். முதல் காரணி, நிறுவனத்தின் நடவடிக்கைகளை குறித்த பல்வேறு உண்மைகளை அதன் நிதிநிலை அதன் வருவாய் மற்றும் நிகர லாபம் செப்டம்பர் 2015 காலாண்டில் முறையே ரூ 568 கோடி மற்றும் ரூ 218 கோடி,ஆரோக்கியமானதாக உள்ளதாக கருதுகிறனர். மேலும் நல்ல விளம்பர மற்றும் சந்தா வருவாய் இந்த வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்காக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது விஷயம், அது மத்திய அரசு தற்போது செயல்படுத்தி வரும் கட்டாய டிஜிட்டலாத்திலும் கணிசமாக பயன் கிடைக்கும் எனவும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. மதிப்பீட்டின் படி, டிஜிட்டலாக்கத்தின் மூலம் கேபிள் சந்தாக்களின் வாயிலாக வரும் சன் டிவியின் வருவாய் கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரியை விட சுமார் 20% அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும், தென்னிந்தியாவில், இன்னும் 25 மில்லியன் கேபிள் வீடுகள் டிஜிட்டலாக்கம் செய்யப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது...மேலும் இந்த பகுதிகளில் சன் டிவி நெட்வொர்க் வலுவான ஒரு மேலாதிக்கத்தில் இருக்கிறது என்பதாலும், அது நிச்சயமாக ஒரு கணிசமான சந்தா வருவாய் மற்றும் நியாயமான நல்ல வளர்ச்சி காண்பார்கள் எனவும் முதலீட்டார்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது என்பதா செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பை மேற்கோள் காட்டி தற்போது கல் கேபிள் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள லைசென்ஸ் பிரச்சினையும் முடிவிற்கு வரும் எனவும் மீடியா உலகில் பேச்சுகள் நிலவுகின்றன.

No comments