இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இனி பேஸ்புக்கிலும் – விரைவில்...!!
TnTelevision
04:08
0
மொபைல் தளத்தில் விளம்பரங்கள்... வருவாயில் 80%
பங்களிக்கிறது. இந்த பங்களிப்புதான் இந்தியாவில் பேஸ்புக் நிறுவனத்திற்கு
மாபெரும் பெருவேட்கையுள்ள பசியை தூண்டியுள்ளது. மேலும் இந்தியாவின் மொபைல்
சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஜனவரி மாதத்தில் சுமார் 100 கோடியை
தாண்டியுள்ளது.
தற்போதை
சூழ்நிலையில் உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சறுக்கல்கள் நிலையிலும்
பேஸ்புக் நிறுவனத்தின் அசுர வளர்ச்சி ஒரு வெளிச்சத்தை காட்டுகிறது.
அடுத்து என்ன?
பேஸ்புக் அதன் லைவ் வீடியோ சேவையை அதிகரிக்க உள்ளது. கடந்த டிசம்பர் ல் தொடங்கப்பட்ட இந்த
அம்சம் சென்ற வாரத்தில் அமெரிக்காவில் ஐபோன் பயன்படுத்தும் பிரபலங்களை
பயன்படுத்தி அதன் சோதனை செய்து பார்த்துள்ளது. இந்தியாவில் நமக்கு இன்னும்
அடுத்த சில வாரங்களில் தங்கள் பேஸ்புக் பக்கங்களில் மக்கள் தங்கள் வீடியோ
ஒளிபரப்பை இந்தியாவில் அண்ட்ராய்டு பயன்படுத்துபவர்களுக்கு வசதியாக
செயல்படுத்த உள்ளன.
சொந்தமாக வீடியோ ஊடத்தை உருவாக்க விரும்பும் எவருக்கும் சாத்தியமுள்ள ஒரு களமாக பேஸ்புக்கை இனி பயன்படுத்த முடியும்.
இந்தியாவில் 2015இன் மத்தியில் சுமார் 125 மில்லியனாக இருந்த பேஸ்புக் பயனர்களின் எண்ணிக்கை தற்போது 2016 ல் 161 மில்லியனை தொட எதிர்பார்க்கப்படுகிறது...
இது தூர்தர்ஷனின் DTH சேவைகள் தவிர்த்து, இந்திய கேபிள் மற்றும் செயற்கைக்கோள் டிவி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2014 இல் சுமார் 139 மில்லியன் இருந்தது மேலும் இந்த எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டில்தான் 175 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது...
தற்போதைய நிலையில் தனியார் கேபிள் டிவி மற்றும் DTH நிறுவனங்களின் மொத்த
பயனாளர்களை சந்தாதாரர்களை விட பேஸ்புக் பயனாளர்கள் அதிகரித்துள்ளனர் என்பது
புள்ளிவிவரமாக உள்ளது.
இந்நிலையில்
இன்னும் ஒரு படி மேலே சென்று அது லைவ் வீடியோ சேவையை தொடங்க உள்ளது
என்றால் பயனாளர்களின் எண்ணிக்கை இன்னும் கூடும் என்ற அச்சத்தில் உள்ளனர்
தொலைக்காட்சி நிறுவனங்கள்...எனவே எதிர்காலத்தில் இந்திய தொலைக்காட்சி
சேனல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து பங்குதாரர்களாக மாறும் நாள் வெகு
விரைவில் வர உள்ளது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்பதே... இந்த
புள்ளிவிவரங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் விடை.

No comments