Select Menu

தலைப்பு செய்திகள்

சேனல் கார்னர்

அரசு கேபிள்

DTH செய்திகள்

டிஜிட்டல் இந்தியா

உள்ளூர் சேனல்

நீதிமன்ற செய்திகள்

தொழில்நுட்பம்

வீடியோ

» » விரைவில் துவங்க உள்ள புதிய செய்தி சேனல்...!!


TnTelevision 19:50 0

விரைவில் துவங்க உள்ள புதிய செய்தி சேனல்...!!





தினசரி செய்தித்தாள் மற்றும் பல இதழ்களை வெளியிட்டு வரும் கோட்டயத்தை -தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மங்களம் குழுமம் விரைவில் மலையாளத்தில் ஒரு புதிய தொலைக்காட்சி செய்தி சேனல் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது மலையாளத்தில் ஏற்கனவே 12 செய்தி சேனல்கள் இருக்கும் நிலையில் புதிய வரவாக மங்களம் குழுமத்தில் இருந்து மற்றொரு தொலைகாட்சி கூடுதலாக இருக்கும்.

இது குறித்து தொலைகாட்சியின் ஆசிரியர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. அஜித்குமார் அவர்கள் கூறுகையில் "நமது சேனலின் ஒளிபரப்பு மிக விரைவில் இருக்கும் எனவும்... சேனலின் லோகோ மார்ச் 1 ம் தேதி வெளியிடப்பட உள்ளது, எனவும் தெரிவித்தார்.  24 மணி நேரமாக செயல்பட உள்ள செய்தி சேனல்
திருவனந்தபுரத்தை மையமாக வைத்து... நாட்டின் மெட்ரோ நகரங்களை தவிர மாநிலத்தின் அனைத்து 14 மாவட்டங்களில் தகவல் சேகரிக்க செய்திமையங்கள் ஏற்படுத்துப்படும் எனவும் அவர் கூறினார்.

1989 ஆண்டு துவக்கப்பட்ட மங்களம் குழுமம் பிரபலமான மலையாள தினசரிகளை வெளியிட்டு வரும் குழுமம்... கேரளாவில் அனைத்து முக்கிய அச்சு ஊடகங்களும் தொலைக்காட்சியை தொடங்கியுள்ளது போல் மங்களம் குழுமமும் அதே வரிசையில் ஒரு டிவி சேனல் தொடங்க உள்ளது.


அச்சு ஊடக தளத்தில் மங்களம்...  மனோரமா மற்றும் மாத்ருபூமி போன்ற மிகப்பெரிய
பகாசுரர்களுடன் போட்டியிட்டு வருகிறது
. இது தவிர தேசபூமி(CPI-M கட்சியின் வெளியீடு) ,மாத்யமம் மற்றும் கேரளா காமெடியும் களத்தில் உள்ளது.   கேரளாவில் சட்டசபை தேர்தல்கள் தொடங்க உள்ள நிலையில் மங்களம் தனது ஒளிபரப்பை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது... ஆனால் இருக்கும் கடினமான போட்டியை சமாளித்து வெற்றி காண வாழ்த்துகிறோம்.  

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments

Leave a Reply