Select Menu

தலைப்பு செய்திகள்

சேனல் கார்னர்

அரசு கேபிள்

DTH செய்திகள்

டிஜிட்டல் இந்தியா

உள்ளூர் சேனல்

நீதிமன்ற செய்திகள்

தொழில்நுட்பம்

வீடியோ

» » மிசோரத்தில் கேபிள் ஆப்ரேட்டர்களை நீதிமன்றத்திற்கு இழுத்த நுகர்வோர் சங்கம்...!!


TnTelevision 08:18 0





மிசோரம் நுகர்வோர் சங்கம் (எம்.சி.யு.) கூறப்படும் சங்கம்..  டிஜிட்டலாக்க அமைப்பில் (DAS) மற்றும் செட் டாப் பாக்ஸ் தொடர்பாக அவர்கள் நுகர்வோரின் உரிமைகளை மீறும் வகையில் உள்ளதாக மாநிலத்தில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளது.
மிசோரம் நுகர்வோர் சங்கம் குறிப்பிடுகையில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது குற்றம் சுமத்தினர் அதில் அவர்கள் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மற்றும் கேபிள் டிவி நெட்வொர்க் (திருத்தம்) 2012 ஆகிய அமைப்புகள் விதித்த விதிகள் எதையும் அவர்கள் பின்பற்ற வில்லை எனவும் மேலும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கண்டிப்பாக நுகர்வோர் நலன் சார்ந்து வகுத்துள்ள QoS எனப்படும் தரக்கட்டுப்பாட்டு சேவை 2012 விதிகளை பின்பற்ற வேண்டும் ஆனால் அவர்கள் முற்றிலும் அலட்சியம் செய்துள்ளனர் எனவும் எம்.சி.யு சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் சங்கம் குறிப்பிடுகையில் ஆபரேட்டர்கள் டிராய் விதிமுறைகளின் படி  அவர்கள் நுகர்வோருக்கு a la carte – அ ல கார்டே எனப்படும் தேவைப்படும் மற்றும் விருப்பம் உள்ள சேனல்களை மற்றும் தனியாக தேர்வு செய்யும் (pick-and-pay) வாய்ப்பை வழங்குவது இல்லை என்றும், அதற்கு பதிலாக நுகர்வோருக்கு சேனல்களை பேகேஜ் செய்து வழங்குகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் செட் டாப் பாக்ஸிற்கு ஒரு ஆண்டு உத்தரவாதம் மற்றும் நுகர்வோருக்கான விலை ரூ 500-ல் இருந்து ரூ 1000 வரை உள்ளிட்ட  பல்வேறு விலைகளில் தேர்வு போன்றவற்றை அவர்கள் நுகர்வோருக்கு வழங்க வேண்டும் ஆனால் இவை எதையுமே அவர்கள் செய்யவில்லை எனவும்... மேலும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தனது சந்தாதாரருக்கு வழங்க வேண்டிய CAF எனப்படும் நுகர்வோர் விண்ணப்ப படிவங்களை கூட அவர்கள் கொடுப்பதில்லை எனவும் தெரிவித்தவர்கள்... மேலும் செட் டாப் பாக்ஸ் பெட்டிகளை வாடகை முறையில் மக்களுக்கு கொடுப்பதையும் நிறுத்தி மொத்தமாக நிர்ணய விலைக்கு விற்கப்படுவதாகவும் அதற்கான பில் மற்றும் வவுச்சர்கள் என எதையும் கொடுப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்
இவை அனைத்துமே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 இன் தெளிவான மீறல்களாக உள்ளன என அவர்கள் கூறினர். இது குறித்து அனைத்து மாவட்ட குற்றவியல் நீதிபதிகள் / ஆணையாளர்களை கொண்டு கேபிள் டிவி தொடர்பான விஷயங்கள் பற்றிய கலந்துரையாடல் செய்ய எம்.சி.யு. அழைக்க வேண்டும் என்று கோரியுள்ளது. மேலும் எம்.சி.யு. கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றம் போகிறது எனவும் , அவர்களின் மேல் நடவடிக்கைக்காக காத்திருக்க வேண்டும் எனவும் அனைத்து நுகர்வோருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments

Leave a Reply