தமிழகத்தில் TCCL டிஜிட்டல் புக்கிங் : இதுவரை 1.5 லட்சம் இணைப்புகளாம்...?!!
TnTelevision
04:16
0
தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் செயல்பட்டு வரும் முன்னணி டிஜிட்டல் கேபிள் நிறுவனம் TCCL என்றால் அது மிகையில்லை. தற்போது அந்நிறுவனம் தமிழகம் முழுவதும் தனது சிக்னலை கொண்டு செல்வதற்கான பணிகளில் துரிதமாக செயல்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு முதல் குமரி வரையில் மாவட்டம் முழுவதும் ஆப்ரேட்டர்களை கொண்டு பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டும் வருகிறது.
இதனடிப்படையில் இதுவரையில்
அந்நிறுவனத்திற்கு டிஜிட்டல் இணைப்பிற்காக புக்கிங் ஆகியுள்ள எண்ணிக்கை
சுமார் 1.5 லட்சத்தை தாண்டும் என கேபிள் துறை பார்வையாளர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை இன்னும்
கூடும் எனவும்... இதனால் கட்டண சேனல்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு
மிகவும் எதுவாக அமையும் எனவும் கணித்துள்ளனர்.
சென்னையில் மட்டும் கேபிள்
இணைப்புகளின் எண்ணிக்கை சுமார் 40 லட்சம் இருக்கும் எனவும் சென்னை தவிர பிற
மாவட்டங்களின் எண்ணிக்கை தோராயமாக சுமார் 35 முதல் 40 லட்சம் வரை
இருக்கும் எனவும் (இதில் 2 மற்றும் 3 டிவிக்கள் கொண்ட வீடுகள் உள்பட )
புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே இணைப்புகளை கைபற்ற கடுமையான போட்டி நிலவி வருகிறது
முதலில் முந்துபவர்களுக்கு முன்னுரிமை...!!

No comments